41
41 சுதந்திரம் வாங்கித் தந்தமைக்காக நம் சுக வாழ்வை எல்லாம் இழக்க வேண்டுமென்று அர்த்தமல்ல! சுதந்திரம் இவர்களின் திறமையால், தியாகத்தால் மட்டும் கிடைத்து விட்டதல்ல. சுதந்திரம் பெற்றோம்; நாமும்தான் மகிழ்ந்தோம். அந்த நேரத்திலும் வெள்ளையனுக்கு ஏற்பட்ட நெருக் கடி, உலகப் போர் முடிந்து அவனுக்கு ஏற்பட்ட சூழ் நிலை, இந்தியாவைக் கட்டிக் காக்க முடியாத நிலைமை, இவைகளும் முக்கிய காரணமாக இருந்தன விடுதலைக்கு என்பதை நாம் எடுத்துக் காட்ட தவறவில்லை. சுதந்திர பூமிதான் ! ஆனால் இங்கேதானே பிண மலைகள் ! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான்தோன்றி தர்பார்கள் ! வடவரின் கையிலே இருக்கும் கொடுங்கோலுக்குப் பெயரா சுதந்திரம் ! அடக்குமுறை தர்பாருக்குப் பெயரா சுதந்திரம்! திராவிடம் தனியாட்சி பெற்றிருந்தால் பிணங்கள் விழுந்திருக்குமா, இங்கே ? திராவிடம் தனியரசு செலுத்தியிருந்தால் மலேயா வுக்கும், இலங்கைக்கும் ஓடுவார்களா, திராவிடர்கள்? இலங்கையிலே இடர் பல ஏற்றுக் கிடக்கும் திரா விடரை எல்லாம் திருப்பி அழைத்து தித்திப்பான வாழ்வைத் தந்திருக்காதா, சுதந்திர திராவிடம்! மலேயாவிலே கணபதி கயிற்றிலே தொங்க நேர்ந்தது. சாம்பசிவம் தப்புவது பெரிதாகி விட்டது. து