இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45
கன்னையா-நம் கண்மணி அன்றொரு நாள் மலேயா தூக்குமேடையிலே பெரியதொரு கொடுமையான ஏப்ப சப்தம் கேட்டது. ஆம், மலேயா சர்க்காரின் கோர வயிற்றுப் பசிக்கு இரையானான் தீரத் திராவிடன் கணபதி. தமிழகத் திலே- தஞ்சைத் தரணியிலே தவழ்ந்து விளையாடிய தங்கமணியை, மலேயா சுக்கல் சுக்கலாக உடைத் தெறிந்தது. திராவிடம் கதறியது. 'தடுத்திடுக' என்று தவித்தது. ஆளவந்தவர் கேளாக் காதினரா யினர். கணபதி தீர்ந்தான். தீர்த்துக் கட்டியது மலேயா! சில வாரங்களுக்கு முன் லோகநாதன் என்ற திராவிடன் உலகத்தை விட்டு விரட்டப்பட்டான். இதோ இன்னொரு தீனி ! கன்னையா ! திராவிடத் திருவிளக்கு! அந்த ஜோதியை அணைத்துவிட தீர் மானித்து விட்டது மலேயா சர்க்கார். அந்த அடக்கு முறை தர்பாரின் முன்னே- ஆர்ப் பாட்ட அழிவு வேலைக்கு முன்னே- வெறியேறிய மரண மேடைக்கு முன்னே- இழுத்துச் செல்லப்பட்டிருக் கிறான் இந்நாட்டு இளைஞன் !