பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 மைந் மாதாவின் மனோநிலை எப்படி இருக்கும் ! தன் ஒருவன்- தாயே என்பான்- தனலான நெஞ்சிலே குளிர் கொட்டுவான் - தங்க மொழி பேசுவான்- அங்க மெல்லாம் பூரிக்கும் என்றெல்லாம் ஆசைக் கனவுகள் எழுப்பிக் கொண்டிருந்த அன்னையின் கண்களிலே வழி வது வெறும் கண்ணீராக இருக்காதே! ரத்தக் கண் ணீராக அல்லவா இருக்கும் ! கன்னையாவின் தாய்- ஆம், நமது தாய்- அந்தத் தாயின் நெஞ்சத்திலே தீ ! தீ ! b ! அந்தத் தீயை அணைக்கப் படை திரள வேண்டும். இதைத் தீர்மானமாக்கி இருக்கிறோம் சென்னை மாநாட்டிலே! அந்தத் தீர்மானம் திராவிடரின் ஆசையின் பிரதி பலிப்பு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆவலின் படப்பிடிப்பு! மதிப்பிற்குரிய 'ஜனசக்தி' பத்திரிகையிலே கன்னை யாவை விடுவிக்கும் முயற்சியில் நம்மையும் ஈடுபட வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் அழைத்திருக்கிறார்கள். இது போன்ற காரியங்களிலே அழைக்காமலேயே ஈடுபடக் கூடிய அக்கரை கொண்டவர்கள் நாம்! கன்னையாவை விடுவிப்பதற்கான நியாயமான போராட்டம் எதிலும் இறங்கக் கூடிய இலட்சிய உணர்ச்சி கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது மட்டுமல்ல; கணபதி தூக்கிலேற்றப் பட்ட போது, கயிற்றில் தொங்கிய கணபதிக்காக கண் க