50
சிங்கங்கள் தோற்று விட்ட களத்தில் சிறு நரிகளா ! திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வளர்ந்து வரும் ஆதரவு கண்டு, எதிரிகள்- எலக்ஷன் வேட்டைக் காரர்கள் - ஏந்திப் பிழைப்பவர்கள்- மக்களை ஏமாளி களாக ஆக்கி வைத்திருந்தோர்- மாறு வேடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளனர். மனம் போனபடி வசை மாறி பொழிகின்றனர். ஆனால், நமது கொள்கைகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியா தவை. சேதுப் பிள்ளைகள் நிற்க முடியாத இடத்திலே இந்தச்செல்லாக் காசுகள் நடனமாட முயற்சிக்கின்றன. பாரதியார்கள் நிற்க முடியாத இடத்திலே இந்த பண வேட்டைக்காரர் கள் மச்சு வீடு கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தை இம்மாதிரியான சில்லரைகளால் நெருங்கக் கூட முடியாதென்பதை கழகத்தின் வளர்ச்சி காட்டி நிற்கிறது. சீற்றம் பிறக்க வில்லை நண்பர்களே, சிரிப்பு தான் வருகிறது! சிங்கங்களே தோற்று விட்ட களத் திலே சிறு நரிகள் வால் முறுக்குவதா? புலிகள் போரிட்டுப் பின்னடைந்த முனையிலே புழுக்கள் நெளிந்து காட்டுவதா? சாதாரணமானவர்களல்ல-