51
51 சங்கத் தமிழ் கற்றவர்கள்- ஆராய்ச்சிப் பெருமக்கள்- அறிவு நிறைந்த அண்ணல்கள்- அவர்களே எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு கொள்கை பலம் உள்ளவர் கள் நாம். குறை மதியினர் குறை கூறுகிறார்கள்- கூறட்டும்- அது அவர்களின் தொழில்! பலாத்காரத்தில் ஒழித்து விடலாம் இந்தப் படையை எனப் பகற்கனவு காணுகிறவர்களுக்கு அறிவிக்க ஆசைப்படுகிறோம். மதுரை மாநாடு இவர் களால் எரிக்கப்பட்ட நேரத்திலே மனம் கலங்கவில்லை நாம்! தூக்கிலே மாட்டி விட்ட நேரத்திலும் துவக்கிய பணியை நீக்கி துவண்டு விட மாட்டேன் என்று உறுதி கூறி பிணமாக ஊசலாட விடப்பட்ட உடையார் பாளையம் வேலாயுதத்தைக் கண்டும் உள்ளம் உடைந்து ஓடிவிடவில்லை நாம்! சேலத்தில் கண்ணையும் காலையும் பெயர்த்தார்கள், காந்தி பக்தர்கள். கலங்கிடவில்லை நாம்! தாலமுத்து நடராசனைப் பிணமாகத் திருப்பித் தந்தார்கள். தைரியமிழந்து விடவில்லை நாம்! ஆச் சாரியார் வந்த நேரம்- அதிகார வர்க்கம் அடக்கு முறை அம்புகளை வாரி இறைத்தது. அயரவில்லை நாம்! குன்றத்தூர் கொடுமை நடந்தது. கட்சி குப்பை மேடாகவில்லை; கோபுரமாகத்தான் உயர்ந்தது ! பரிகசிப்போர்— பலாத்காரத்தில் இறங்குவோர்- எங்கள் பழைய வரலாற்றை- நாங்கள் வளர்ந்த வர லாற்றை ஒரு முறை எண்ணிப் பார்க்கட்டும். முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர் பெரும்படை அழகிரி சாமி தலைமையில் புறப்பட்டு சென்னை நோக்கிச் செல் கிறது. செல்லும் வழியிலே ஒரு சிறு கிராமம். அகிம்சா வாதிகள் நிறைந்த இடம். செருப்புத் தோரணம் கட்