பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டினார்கள் நமதியக்கத் தொண்டர்களை கேலி செய்யும் முறையில்- அறப்போரை அவமதிக்கும் வகையில், ஆனால் தொண்டர்கள் தோரணத்தைக் கடந்து செல்ல வில்லை. அழகிரி பேச ஆரம்பித்தார். மணிக் கணக் கிலே மாவீரனின் முழக்கம் நடைபெற்றது. தோரணம் கட்டிய தோழர்கள் துவண்டு போனார்கள். மன்னிப்புக் கேட்டார்கள். தோரணத்தை அவிழ்த்தார்கள். மாலை அணிவித்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள். இது நடந்த நிகழ்ச்சி— கற்பனைச் சம்பவமல்ல ! ஆகவே, தூற்றுவோர் துதிப்பார்கள் என்ற நம் பிக்கையில்தான் தொண்டாற்றுகிறோம். சிறுமதியினர் தான் சீறுகிறார்கள் என்றால், கண்ணியமிக்க காமராஜர் களும் கனல் கக்குகிறார்களே என்றுதான் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. மந்த மதியினர் சிலர் தான் பேசு கிறார்களே என்றால், மதிப்புமிக்க மந்திரிமார்களும் கச்சைக் கட்டுகிறார்களே என்றுதான் வருந்த வேண்டி யிருக்கிறது. மந்திரிமார்களின் பேச்சிலே எவ்வளவு மட்ட ரகமான வார்த்தைகள் ! வரலாமா? மதிப்பிற் குரியவர்கள் அல்லவா? மாகாணத்தை ஆளுகிறவர்கள் அல்லவா ? "திராவிடர் இயக்கம் காங்கிரசின் விரோதி! காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்க்கும் துரோகக் கும்பல்!” என்று எங்களுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. வாதத்திற்காக அக் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், அப்போதும் நாங்கள் கட்சிப் பெயரை 'காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி' என்று வைத்துக் கொண்டிருக்க வில்லையே! உணரட்டும் உண்மை