பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

உணராத 53 உதவாக்கரையினர், எங்களது உயர்ந்த பண்புகளை, என்று இதைக் கூறுகிறேன் ஒரு புறத்திலே உண்மை அறியாதவர்- ஒரு புறத் திலே ஊர் கெடுப்போர்- இன்னொரு புறத்திலே எகத் தாளம் பேசுவோர்- வேறொரு புறத்திலே வேதனை தரும் சர்க்கார்— இதற்கிடையே திராவிட முன்னேற்றக் கழகம் வளர்கிறது. ஆனால், இந்த எதிர்ப்பு உணர்ச்சி கழகத்துடன் இறுதிப் போர் நடத்த முன் வந் துள்ளது. அதன் விளைவுதான் ஆங்காங்கு எழுப்பப் படும் சிறு பூசல்கள். அண்ணாவை சிறைக்கு அனுப் பியது. ஆசைத்தம்பியை வாட்டியது. ஆச்சாரியார் வந்தபோது அடிதடி நடத்தியது. குன்றத்தூர் செய்து காட்டியது. நாடெல்லாம் 144 போடுவது, நாரண மங்கலம் நடத்திக் காட்டுவது என்ற விதத்தில் பலப் பல :- சட்டத்தை மீறும் அளவுக்குக் கொண்டு வரப்பட் டோம். எந்த சட்டத்தை ? பேச்சுரிமை பறிக்கும் சட்டத்தை! எழுத்துரிமை பறிக்கும் சட்டத்தை ! 144-களை மீறினோம்; இன்னும் மீறுவோம். புத்த கத் தடையை மீறினோம்; இன்னும் மீறுவோம். நாட கத்தை மீறினோம்; இன்னும் மீறுவோம். தடை மீறு வதிலேகூட வீரப்போர் ஒரு புறம்--நகைச் சுவைப்போர் ஒரு புறம் நடைபெறும்! கற்பனை செய்து பாருங்கள், 144 போடுகிற ஊரிலே கல்யாண ஊர்வலமும், பிரேத ஊர்வலமும் மட்டும் செல்லலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்படும்போது,