பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 பட்டோம். "செவிச் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்" என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்க முடியாது செய்யவேண்டும் என்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள் கம்பராமாய ணம் திராவிடரை அரக்கர்கள், குரங்குகள் என்று சித் தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்க வேண்டு மென்கிறோம்.அடிப்படையான வெறுப்பே அதுதான். ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான். அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப் படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரிய நூலா யிருப்பது தன்மானமற்ற செயல் என்று விளக்கினோம். காலத்துக் கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள், கம்பதாசர்கள் ! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக் கொடுத்து இருக்கிறான் என்பதே நமது தலையாயக் குற்றச்சாட்டு. அதைத்தான் எதிர்த் துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலேகூட நாம் கூறினோம் - நாங்கள் இலக்கிய விரோதிகள் அல்ல, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துகள் பல கொண்டனவாயினும் திராவிடரை உயர்த்திக் காட் டியிருக்கின்றன, அவைகளை நாங்கள் வெறுப்பதில்லை என்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக்கிடக்கும்போது தமி முனை அரக்கன் எனக்கூறும் கம்ப ராமாயணத்துக்கேன்