57
57 விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவிய துண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல; பகவத் உணர்ச்சியு மல்ல; அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல; தமிழர்களுடைய வாழ்க்கை முறை சிலப்பதிகார காலத்தில் எப்படி இருந்தது என் பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக் கிறது என்பதற்காகவும், வடநாட்டாரின் முடி நெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும், நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என் கிற ஆர்வத்தாலும், கண்ணகி என்கிற பாத்திரம் கற் பனைக்கு எட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும், அக்காலப் பெண்களின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்து கொள்ளுகிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டி யன் - மூவருடைய ஆட்சி பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் அரிய நூல் என்ற காரணத்தாலும் சிலப் பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை. திருக்குறளை ஏன் போற்றுகிறோம்? தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா ? இல்லை... அக்காலத் தமிழகத்தைப் பற்றிய நல்லதொரு படப் பிடிப்பு திருக்குறள் என்பதாலும், திராவிடர் நீதிமுறை கள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக் கிறோம். குறைகளே இல்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிப்பட்டுப் போகின்றன. வரப் போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற