60
ஐக்ய மாகாணம் அருமையான பாடம் "யாரடா "திராவிடநாடு திராவிடருக்கே !" இந்த முழக்கம் காதிலே விழுந்ததோ இல்லையோ- துடித்தெழுந்து பாவி! பிரிவினைப் பேயனே! இது ஒரே நாடு-ஒரே மக்கள்!” என்று உரத்தக்குரலில் பேசிடுவார்கள் பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் புரிகிறவர்கள். திராவிடம் தனித்து வாழ்வ தற்கான சூழ்நிலைகளையும் நாம் பலமுறை சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சென்னை மாகாணம் சீரழிக்கப்படு கிறது- வடக்கு மாகாணங்கள் வளம் பெறுகின்றன என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.மற்ற மாகாண ங்களின் எடுபிடியால் ஏங்கித் தவிக்கிறது சென்னை என்பதை எத்தனையோ நிகழ்ச்சிகள் காட்டியிருக்கின் றன. அவைகளை உணர்ந்தும்கூட உண்மையை மறைக் கும் உத்தமர்கள் உதைத்த காலுக்கு முத்தமிடும் வீரர் களாகவே காட்சி தருகிறார்கள். நாம் தரும் செய்திகள் அவர்களால் அலட்சியப் படுத்தப் பட்டாலும்கூட அவர் களுடைய ஏமாற்று மொழிகளுக்கு இறையானவர்களின் கண்களையாவது கட்டாயம்திறக்குமென்று நம்புகிறோம்.