பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61 தென்னாட்டுக்குத் தேவையான உளுந்து போன்ற உணவு தானியங்கள் கிழக்கு பஞ்சாப், ஐக்கிய மாகா ணம், ராஜஸ்தான் முதலிய இடங்களிலிருந்துதான் கிடைக்கின்றன. அதில் குறிப்பிடக் கூடியது ஐக்கிய மாகாணம்தான். அது, மேற்சொன்ன பொருள்களை வெளி மாகாணங்களுக்குச் செல்வதை தடைசெய்திருக் கிறது. கட்டுப்பாடு, விலை நிர்ணயம் ஆகிய புது உத்தர வுகளின் மூலம்! ஐக்கிய மாகாணம் இந்திய யூனியனைச் சேர்ந்தது தான்; நேரு பிறந்த மாகாணம் கூட. ஆனால், அது பிற மாகாணங்களைக் கேவலப்படுத்தும் நிலையில்-குறிப்பா கச் சென்னையை மட்டமாக மதித்து இம்மாதிரி ஒரு உத்தரவை வீசியிருக்கிறது. முன்பொரு தடவை இதே மாகாணம் சென்னைக்கு செய்த பெரும் பிழையை யாரும் மறந்திருக்க முடியாது. அரிசி கேட்டது ஐக்கிய மாகா ணத்தை சென்னை சர்க்கார். அந்த மாகாணம் சென்னை க்கு அரிசி அனுப்பியது. எப்படி? நியாயமாகத் தர வேண்டிய விலைக்கு அதிகமாக ஒரு கோடி ரூபாய் சென்னையிடமிருந்து வாங்கிக்கொண்டது. அதிக விலை ஒரு கோடி ரூபாயை அளிப்பதற்கு முடியாமல் அவதிப் பட்ட சென்னை அரசாங்கம் ரேஷன் கடைகளில் விற்கப் படும் அரிசிக்கு படி ஒன்றுக்கு ஒரு பைசா உயர்த்தி மக் களிடமிருந்து கிடைத்த ஒரு கோடி ரூபாயை ஐக்கிய மாகாணத்தின் திருவடிகளிலே வைத்து தெண்டனிட் டது. சென்னையிடம் ஒரு கோடி கொள்ளையடித்த கொடுமைபற்றி ஐக்கிய மாகாணத்தை டில்லி சர்க்கார் எ துவும் கேட்கவில்லை. இதேபோல சர்க்கரையிலும் ஒரு