பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 சங்கடத்தை உண்டுபண்ணி சென்னையைத் தவிக்க விட்டது அந்த மாகாணம்தான். 6 மாகாணங்கள் சகோதர பாசம் கொண்டவை! மாகாண உணர்ச்சிகள் கூடாது. ஒரே நாடு-ஒரே மக் கள்' என்று கூறுகிறவர்கள் ஐக்கிய மாகாணத்தின் இந்த அகம்பாவ உணர்ச்சிக்கு என்ன அர்த்தம் சொல் லப் போகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. நேரு வின் மாகாணம்-நேர்மையாளர் பிறந்த மாகாணம்- இப்படி நெறிதவறி வெறிபிடித்து அலைகிறது. ஆனால் நேருவும், அவர் நிழல்களும் 'ஒரே நாடு-ஒரே மக்கள் என்ற உபதேசத்தை மறக்கவில்லை. . ஐக்கிய மாகாணத்திற்கிருக்கிற மாகாணப் பற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் சென்னைக்கு அந்த மாகாண உணர்ச்சி கூடாது, அது மகாபாவம் என்கிறார்களே, அந்த மட்டரகக் கருத்தைத்தான் மண்டையிலடிக்க வேண்டு மென்கிறோம். ஒருகோடி கொள்ளை போயிற்று; டில்லி கேட்க வில்லை. தானியங்களுக்குத் தடைபோட்டது; டில்லி பேசாமடந்தையாக இருக்கிறது. இன்னும் 'ஒரே நாடு' என்ற "கூச்சல் மட்டும் மறையவில்லை. வடநாட்டுத் தலைவர்களிலிருந்து அவர்களுக்கு வால்பிடிக்கும் தென் னாட்டுத் தவளைகள், குட்டிச் சுவற்றுக் குயில்கள், சந்து முனை சிந்து நடைக்காரர்கள் வரையிலே திராவிடநாட் டுப் பிரிவினையை எதிர்க்கிறார்கள். திராவிட இயக்கத் தின் மீது எதிர்ப் பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஐக்கிய மாகாணம் தரும் பாடத்தை அவர்கள் உணர மறுக்க லாம். ஆனால் திராவிட மக்கள் அந்தப் பாடம் தரும்