பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65 சர்வாதிகாரிகள் பலர், காலடியில் மக்களைத் துவைத்து வாழ்ந்த நேரத்தில் அவர்களை வீழ்த்திட புரட்சிகள் உருவாயின. சர்வாதிகாரிகளின் தலை கள் உருட்டப்பட்டன. அரசியலிலே நாகரீகம் நல்ல அளவுக்கு அமையாத நேரமது! கொடியவர்க்குத் தண்டனை கொலை-குடும்பத்தோடு கொலை- கூட்டோடு கொலை- என்ற விதத்திலே தரப் பட்ட காலம். பழிவாங்கும் உணர்ச்சி பலாத்காரத்தோடு இணைந் திருந்த நேரம். ஆகவே இத்தகைய தண்டனைகள் குற்றமாகக்கூட கருதப்படாத காலமது. இன்றோ அரசியலிலே நாகரீகம் தேவைப்படுகிறது. காட்டு மிராண்டித்தனம்-பேய்க் கூத்து-இவைபோன்ற தாண்டவங்கள் கூடாது என்கின்ற நிலை வளர்ந்திருக் கிறது. இப்போதே காந்தியாரும், லியாகத்தும், அங் சானும் மற்றும் சிலரும் கொலை செய்யப்படுகிற அள வுக்கு அரசியல் நேர்மை இருந்திருக்கிறதென்றால், அரசியல் நாகரீகம் அற்ற அந்த நாட்களிலே நடைபெற்ற புரட்சிகளிலே எதிரிகள் - அதுவும் கொடியவர்கள் கொல்லப் படுவதிலே ஆச்சரியம் என்ன இருக்க முடியும்! அந்நாள் கொடுங்கோலர் கொலையை வெகுமதியாக அடைந்தனர். இந்நாள் கொடுங்கோலர் தோல்வியை வெகுமான மாகப் பெறுகின்றனர்; யெற்றனர்.