பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66 அந்நாள் கொடுங்கோலனுக்கு எதிரே வேட்டு முழக்கம்! இந்நாள் ஓட்டுச் சீட்டு ! இப்படி மாறியிருக்கிறது மக்களின் தீர்ப்பு முறை ! அந்தத் தீர்ப்பு முறையிலேதான் மக்கள் மன்றத் திலே குற்றவாளியாக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தவர் கள் பலர் வீழ்த்தப்பட்டனர்; வெற்றிகரமாக வீழ்த்தப் பட்டனர். நமது இதய தாகம் ஓரளவு அடங்கி விட்டது, நாட்டைக் காடாக்கியவர்கள் நலிவுற்றது கண்டு ! கள்ளிக் காட்டை அழித்து விடுவது மட்டும் நமது வேலையல்லவே! கள்ளி இருந்த இடத்திலே பள்ளி அமைப்பது அல்லவா நமது லட்சியம்; இதயகீதம்; எல்லாம்! காங்கிரசை ஒழித்துக் கட்டுவதை மட்டும் லட்சிய மாகக் கொண்டிருந்தால் தேர்தலின்போது ஆதரவு கேட் டவர்களிடம் திராவிட நாட்டுப் பிரச்னையை முக்கியமாக வைத்திருக்காது, தி. மு. கழகம்! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கொள்கை தி.மு.கழகத்திடம் இல்லாத காரணத்தால்தான் திரா விடநாட்டுப் பிரச்னையை உயிர்ப் பிரச்னையாக- அடிப் படைப் பிரச்னையாக தேர்தல் காலத்திலும் அனுஷ் டித்து வந்தது தி. மு. கழகம் ! - ஏசல்-ஏளனம்-கிண்டல்-கேலி-கண்டனம் இவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் லட்சியம்