பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67 ஒன்றையே முன்னிருத்தி தேர் தலில் தன் பிரசாரத்தைச் செய்தது தி. மு. கழகம் ! கிராமங்களிலே-பட்டி தொட்டிகளிலே-இதுவரை கேள்விப்பட்டிராத குப்பங்களிலே-தேர்தல் பிரசாரத் திற்கா க தி. மு. க. வீரர்கள் சென்றபோது திராவிடப் பிரிவினை முழக்கத்தை மக்கள் மனதிலே பதிய வைத் திடத் தவறவில்லை. தன் இலட்சியத்தைப் பரப்பிடத் தேர்தலையும் ஒரு சந்தர்ப்பமாக தி.மு.க. கருதியது. அப்படிக் கரு தியதிலே வெற்றியும் பெற்றது. ஆதரவு பெற்றவர்கள்-தி. மு.க. ஓப்பந்த ஏட் டிலே கையெழுத்திட்டவர்கள்- திராவிட நாட்டை வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக் கைக் கொண்டு அலையவில்லை நாம். நமது போராட்டத் திற்கான பல ஆயுதங்களிலே சட்டசபை, மக்கள் சபை யிலே எழும் குரலையும் ஒரு ஆயுதமாகக் கருதுகிறோம். லட்சியம் என்பது கல்லால் அடித்தவுடன் கீழே விழு கிற மாங்காய் அல்ல! மாங்காய்கூட குறி தவறினால் கீழே விழாது. எந்த நாட்டு அரசியல் சரித்திரத்தை எடுத்தாலும், லட்சியப் போராட்டத்திலே முதல் மோதுதலிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. ரஷ்ய நாட்டுப் புரட்சி ஒரே நாளிலே முடிந்து விடவில்லை. சீனாவின் புது வாழ்வு நினைத்தவுடன் கிடைத்துவிடவில்லை. இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரப் போராட்டத்தை ஐம்பது வருடங்கள் நடத்தியிருக்கிறது.