பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 அதுமட்டுமல்ல; வெள்ளையன் ஆட்சி நடைபெறும் போது அமைந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் விடுதலைக் கான குரலை எழுப்பியதே தவிர, அப்போதே சுதந்திரத் தை மூட்டைக் கட்டிக்கொண்டு எடுத்து வந்து மக்கள் கையிலே கொடுத்துவிடவில்லை. இவை எல்லாம் அரசி யலிலே அப்பாவிகளாய் இருப்பவர்கள்கூட அறிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான். வெளியிலே நாம் நடத்த இருக்கும் திராவிடப் பிரிவினைப் போராட்டத்திற்கு சட்டசபைகளிலும்- மக்கள் சபைகளிலும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று நிபந்தனை கேட்டோம். அப்படி நிபந்தனை தந்த வர்களை மட்டும் திராவிட நாட்டுப் பிரச்னை நம்பியிருக் கிறது என்று அர்த்தமல்ல; நிபந்தனை கேட்கிற அள வுக்கு கழகம் வளர்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்! இதைப் புரிந்துகொண்டுதான் விஷமிகள் விஷத்தை வாரி இறைக்கிறார்கள்; புரியாதவர் போலவும் நடிக் கிறார்கள். பொறாமையின் விளைவுதான் அவைகள் என்பதை உணர்ந்துகொண்டு செயலாற்றிடப் புறப்பட வேண்டும் திராவிடக் காளையர். நாடெங்கும் திராவிட நாதம் பரப்பிட நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது கடந்துபோன தேர்தல். தேர்தல் முடிந்து விட்டது; தேர்தலுடன் நம் பிரச் னைகள் முடிந்து விடவில்லை. திராவிடநாடு கிடைக்கும் வரையில், அப்படிக் கிடைத்த திராவிடத்திலே சமத்து