பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

________________

6 ஏவிய அடக்குமுறைகள் கொஞ்சமா, நஞ்சமா? நான்காண்டு முடிய இந்த அகிம்சா சர்க்கார் 1982 தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறதே ! இது வெள்ளையன் காலத்தில் கூட நடக்காத அக்ரமம் ! வெள்ளையன் ஆட்சியிலே மட்டுமல்ல; வேறெந்த நாட் டிலும் நடந்ததாகத் தெரியவில்லையே ! இத்துடனாவது நின்று விட்டார்களா இந்த காந்தி பக்தர்கள் ! இல்லை ! துப்பாக்கிப் பிரயோகத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றா, இரண்டா ? இல்லை தோழர்களே ! 3784 பேர்கள் பதை பதைக்க உயிரிழந்தனர். பத்தா யிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஐம் பதினாயிரம் மக்கள் சிறையில் வைக்கப்பட்டனர். சிறைப்பட்டவர்களைப்பற்றி விசாரணையாவது உண்டா? இல்லை! சிறையிலும் அவர்களை சிப்பாய்கள் சும்மா விட்டார்களா? தடியடி தர்பார் நடத்தினார்கள்! தனி கொட்டடியில் இட்டு இம்சித்தார்கள் ! போதாக் குறைக்கு சுட்டும் பார்த்தார்கள். பரிதாபத்திற்குரிய நம்மவர்கள் அங்கேயும் எண்பத்திரண்டு பேர் உயிரிழந் தார்கள்! பாருங்கள் தோழர்களே, நமது ஆட்சி என்று சொல்லிக் கொள்ளுகிறோமே, அதன் லட்ச ணத்தை! மஞ்சள் பெட்டிக்கு நாம் அளித்த ஓட்டு, நம்மை அடிக்கவும் சுட்டுத் தள்ளவும் தான் உதவியது. மக்கள் பசியைத் தீர்க்கவில்லை ! இந்தக் கொடுமைகள் வேறெந்த நாட்டிலாவது நடக்குமா? - நடக்கத்தான் வீட்டு வைப்பார்களா அந்நாட்டு மக்கள் ! எனக்கு முன் பேசிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார், திருவாங்கூர் காங்கிரஸ் ஆட்சியில் மகனைக் கொண்டு மாதாவைப் புணர வைத்தார்களென்று! ஆம்,நானும்