69
B 69 வம் கொழிக்கும் வழி இருக்கும் வரையில், வகுக்கப் பட்ட சமத்துவம் வகையோடு வாழ்ந்திட பாதுகாத்திடும் பணியிருக்கும் வரையில் நம் பிரச்னைகள் முடிந்து விடாது. நம் இலட்சியக் குரல் முடிந்து விடாது. அடுத்து அமையப் போகும் மந்திரிசபை யாருடை யதாக இருந்தாலும், எந்தக் கட்சியுடையதாக இருந்தா லும், திராவிடத்தை டெல்லியிலிருந்து வெட்டி எடுக்கும் வீரப் போராட்டத்திலே தி. மு. கழகத்தார் குதிக்கத் தான் போகிறார்கள். டில்லியின் கொடுமைகளை, டில்லியின் ஏகாதிபத்தி யத்தை, திராவிடம் இனியும் வளரவிட எண்ணவில்லை. ஆகவேதான், திராவிடர், நாட்டுப் பிரிவினைப் போரிலே இன்னும் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்கள். அதற்கு சட்டசபையிலே யிருந்தும் நமக்கு ஆதரவுக் குரல் எழும்பும். அது டில்லியிலேதான் எதிரொலிக் கும். அப்படிக் கிளம்புகிற குரலை அடக்கிடும் போக் கினர் ஆட்சிபீடத்திலே இருந்தால் அதற்காகக் கவலைப் படப் போவதில்லை திராவிடர் எழுச்சிக் கடல்! அந்தக் கடலின் கொந்தளிப்பு, டில்லி மூலவர்களை மூழ்கடிக்கும்! டில்லி தாசர்களை விரட்டி அடிக்கும் ! பலரை பலி கொடுத்து வளர்த்த சொல் திராவிடம்! வேலாயுதம், தாளமுத்து, நடராசன், அழகிரி, செல்வம், நெல்லிக்குப்பம் மஜீத், சென்னை பாண்டியன் இப்படி பலப் பலர் கடைசி மூச்சை 'திராவிடம்' என்ற மூச்சாக மாற்றிவிட்டு மறைந்திருக்கிறார்கள் ! 5