72
72 சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆக, நாட்டின் நலன் கருதிய நாங்கள், கலைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடிக் கொடுத்த பிறகு சில்லுண்டிகளும், சில்லரை களும், சின்னது பெரியதுகளும் எங்களை கலை விரோதி கள் என்று கூறுகிறார்கள். எப்படி நாங்கள் கலைக்கு விரோதிகளாவோம்? ற பேச்சிலே ஒரு புதுமையை உண்டாக்கினோம்; நாடகத்திலே ஒரு புரட்சியைக் கண்டோம்; இசையிலே ஒரு இயற்கை இன்பத்தைப் புகுத்தினோம்; இதற்காகவா நாங்கள் கலை விரோதிகள் ? பழமையை ஒழித்து, அறிவிலே ஒரு புதுமை காண்பது தவறா? இல்லையே! அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டனரே! மக்கள் காண்பதும் கேட்பதும் பகுத்தறிவுப் புரட்சி யாயிற்றே! கிருஷ்ணலீலா, ஹரிச்சந்திரா, சம்பூர்ண ராமாயணம் போன்ற நாடகங்களுக்குத்தான் அந்த நாட்களில் கூட்டம் வரும் அது ஒழிந்து, அறிவு வளர்ச்சிக்கான பகுத்தறிவு நாடகங்களை அல்லவா மக்கள் இன்று விரும்புகின்றார்கள். அன்று ஹரிச் சந்திரா நாடகம் என்றால், இன்று அதற்குப் பதில் அண்ணா 'சந்திரமோகன்' நாடகம் நடத்திக் காண்பிக் கிறார். அன்று மகாபாரதம் மிகமிக நன்றாக இருக்கிறது என்றால், இன்று ராமசாமியின் நாடகம் மக்களைப் பகுத் தறிவுப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது. அந்தப் புரட்சியைக் கண்ட நாங்களா கலைவிரோதிகள்? "ராமாயணம் இழிவைக் கற்பிக்கிறது. வேண்டாம்" என்கி ே றா ம். சிலப்பதிகாரமும் ராமாயணத்தைப் போல் பழைமையானதுதான். அதை ஏன் நாங்கள்