74
74 அத்துடனின்றி, சீதையைப் பற்றின நினைவு அவன் மனதிலே இருக்குமென்று, அவன் உடலுக்குள் பாய்ந்து இரத்தத்தையும் சுவைத்து, நரம்புகளின் உள்ளும் புகுந்தோடி, இராவணன் உடலை சல்லடைக் கண்களா கச் செய்து, தன் மீதுள்ள இரத்தத்தைக் கழுவ, ஏழு கடல்களிலும் சென்று குளித்து, மறுபடியும் இராமனின் அம்புராத்துளியில் வந்து படுத்துக் கொண்டதாம். இது எத்தனை பச்சைப் பொய் பாருங் கள். அறிவுக்குப் பொருத்தமாக, ஆராய்ச்சிக்குட்பட்ட தாக இருக்கிறதா? இந்தக் கவி கம்பன் பாடியது! யார்தான் பாடினால் என்ன? தவறைத் தவறென்று கூறுகிறோம். இப்படி கூறியதற்காக நாங்கள் கலை விரோதிகளா? நாங்கள் என்றும் கலையை வளர்க்க அல்லவா பாடுபடச் செய்வோம். கூறு நாங்கள் எங்களைப் பழமைக்கு விரோதி என்று கிறார்கள். நாங்கள் பழமையிலும் நல்லது இருந்தால் எடுத்துக் கொண்டு அறிவுக்கு ஒவ்வாததைத் தள்ளி விடுகிறோம். குரங்கு பேசுமென்கிறார்கள்; பேசாது என்கிறோம். இன்னும் எத்தனையோ கற்பனைக் கும் கட்டுப்படாத ஆபாசங்கள் பல இருக்கின்றனவே இராமாயணத்தில்! சில்லுண்டுகளுக்கு சவால் விடு கிறேன், தைரியமிருந்தால் கொண்டு வரட்டும் இராமா யணத்தை மேடைக்கு. பொது மக்கள் தீர்ப்புக்கு விடட்டும். இல்லையேல் அண்ணா எழுதிய கம்பரசத்தை 4 டோஸ் சாப்பிட்டுவிட்டு சும்மா கிடக்கட்டும் மூலையில். இந்தக் காலத்து இராமன் சீதையைக் காணாவிட் டால் கிஷ்கிந்தைக்கு ஓடமாட்டான். ஜனகருக்கு டிரங்க் போடுவான், 'சீதை வந்தாளா?' என்று. அல்லது