பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அயோத்திக்கு தந்தி அடிப்பான், 'பரதா, அண்ணி வந்தாளா?' என்று. இல்லை என்று தெரிந்தால், 'சுதேச மித்திர'னில் சீதையின் புகைப்படம் போட்டு, விளம் பரம் செய்வான். கண்டுபிடித்தாலும் இராவணனும் இராமனும் கோர்ட்டுக்குச் சென்று வாதாடுவார்கள் கூண்டில் நின்று கொண்டு. இது நடக்கக் கூடியது! இந்தக் காலத்தில் சகோதர வாஞ்சையே கிடையாது என்கிறார்களே, இராமாயணத்தில் மட்டுமென்ன வாழு கிறது? வாலி, சுக்ரீவன் கதை தெரியா தா எங்களுக்கு ? இராவணனை விபீஷணன் துரோகம் செய்ய வில்லையா ? இதைக் கவியாகப் பாடிவிட்டார் கம்பர்; விளக்கம் தருகிறார் டி. கே. சி ! சிதம்பரம் பிள்ளையவர்களை ஒருவன் கேட்டானாம், "அய்யா! நீங்கள் சுதேசியை ஆதரிக்கிறீர்கள். ரொம்ப சரி! பரதேசச் சாமான்களை வாங்காதே என்றும் சொல்லி பிறர் மனதை நோக வைக்கலாமா ?” என்று. உடனே சிதம்பரம் பிள்ளை அவனைப் பார்த்து, "நீ எப்போதும் உண்மையே பேசுகிறாய். அது நியாயம். ஆனால், அதற்காகப் பொய்யைக் கண்டு வெறுக்காதே என்பது போலிருக்கிறது உன் கேள்வி" என்று பளிச் சென்று பதில் சொன்னாராம். அதைப் போல இருக் கிறது இந்த சில்லரைகள் நம்மைப் பார்த்து கலைக்கு விரோதி என்று கூறுவது. ஒரு மேதாவி கூறுகிறார், எங்களால்தான் இந்த நாட்டில் மழை பெய்ய வில்லை என்று. பஞ்சத்திற்குக் கூட நாங்கள் தான் காரணமாம். நாங்கள் ஒழிந்துவிட வேண்டுமாம். அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.