பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இந்தக் காலத்தில் எங்களால்தான் மழையின்மையும், பஞ்சமும் வந்ததாக இருக்கட்டுமே; ஆனால், அந்தக் காலத்தில் நல்லதங்காள் தன் நாட்டில், ஒன்றிரண்டல்ல- 12 வருஷங்கள் மழையில்லாத பஞ்சத்தால் மூளி வீட் டுக்கு வந்ததாக எழுதி வைத்திருக்கிறாயே, அது யாரால் வந்த பஞ்சம் என்று சொல்லட்டுமே பார்க்கலாம். முடியுமா இந்த சில்லுண்டிகளால்! சொல்ல முடியாதே! இன்னும் எத்தனையோ காரணங்கள் காட்டலாம், இதைப் போலவும், இன்னும் மதங்களின் பெயரால் மக்களை மாக்களாக்கி வைத்திருப்பதற்கும். அறிவு வளர்ந்துள்ள இந்த விஞ்ஞான காலத்திலும், கல்லையும் மண்ணையும் காட்டித்தானே மக்களை ஏமாற்று கிறார்கள் - வயிற்றை வளர்க்கிறார்கள். இழிச் செயல்களா எங்களுடையவை? அம்மா திரி எங்களுடைய லட்சியம் நாடு விடுதலையடைந்து யாவரும் சுகமாக வாழ்வு நடத்த வேண்டும் என்பது தான். இதற்காகப் பேசுகிறோம்; நாடகம் நடத்து கிறோம்: இசைக் கலை மூலம் அறிவுப் பிரச்சாரம் செய் கிறோம். நாங்கள் இல்லாமல் எந்தத் துறையிலும் புதுமையைக் காண முடியாதே ! நாடகமா?- கே.ஆர். இராமசாமி, இராதா ! பாட்டா?- அனிபா ! பேச்சா?- அண்ணாதுரை! இப்படியல்லவா இருந்து வருகிறது இன்றைய நாட்டின் நிலை! இதைக் கண்டா வது புத்தி வரவேண்டாமா, உண்மைக் கலைக்குப் பாடு படுவதாகச் சொல்லும் உளறுவாயர்களுக்கு! ஆகவே, இனியாவது எங்களை "கலை விரோதிகள் " என்று