7
________________
படித்தும் கேட்டும் இருக்கிறேன் அந்த அக்கிரம அநியாயச் செய்தியை ! அதிலும் நமது காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததாக அவர் கூறியதைக் கேட்ட உங்கள் மனம் என்ன பாடு பட்டது! இன்னும் விவரமாகச் சொல்லுகிறேன், கேளுங்கள். கேட்டு இந்த அகிம்சா மூர்த்திகளின் காலத்தில் எந்தெந்த விதமான இம்சைகள் நடந்திருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். பிறகு கூறுங்கள் உங்கள் தீர்ப்பை, யாருக்கு ஓட்டுப் போடுவது என்று! பொதுவுடமைவாதி என்ற சந்தேகத்தின் மீது பிடிக்கப்பட்ட ஒருவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்களாம்! அழைத்து வந்தவனை அவன் சுருண்டு சுருண்டு விழும் வரையில் அடித்தார்களாம். அடி தாளாமல் விழுந்த அவன், " தண்ணீர், தண்ணீர் ” என்று கத்தினானாம் ! அதைக் கேட்ட அவர்கள் தண்ணீர் வேண்டுமா ? இதோ தருகிறேன் !" என்று கூறி, மறைவாகப் போய் சிறுநீரைக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினார்களாம். தண்ணீர் கேட்ட உங்கள் தோழன் சிறுநீராக இருப்பதைக் கண்டு,“அடப் பாவிகளே ! நான் தண்ணீர் கேட்டால் மூத்திரத்தைக் கொடுக்கிறீர்களே!" என்று பரிதாபக்குரலில் அலறினான். அவ்வார்த்தையைக் கேட்ட அப்புலிகள், மறுபடியும் அவனை அடித்து, அதையே குடிக்கும்படிச் செய்தார்களாம்! இச் செய்கையால் களைப்புற்ற அவன் "அம்மா, அம்மா " என்று கூச்சலிட்டான். கூச்சலைக் கேட்டதும் அவர்கள் அவனைப் பார்த்து, "அம்மாவா வேண்டும்? இதோ அழைத்து வருகிறோம்" என்று ஓடோடியும் சென்று, வீட்டில் படுத்திருந்த அவன்