79
79 பரிமளிக்க வைக்கிறதென்பதும், மத்திய அரசாங்கத் தின் போக்கிலிருந்து நன்கு அறியக் கிடக்கிறது. உலக நிதியிலிருந்து இந்தியா வாங்கிய கடன் தொகையில் தென்னிந்தியாவுக்கு நியாயமான பங்களிக் கப்பட்டதா ? இல்லை. வட இந்திய மாகாணங்களில் தொழிற்சாலைகள் தொடங்கவும், அவற்றை அபிவிருத்தி செய்யவுமே அத் தொகையில் பெரும் பகுதி பயன் பட்டது. சர்க்கரை ஆலைகள் உத்திரப் பிரதேசத்திலும், பீஹாரிலுமாக அமைக்கப்பட லைசென்ஸ் அளிக்கப் பட்டதே தவிர, தென்னிந்தியா கவனிக்கப்படவில்லை. பம்பாய் மாகாணத்தில் பருத்தி விளைவிக்க அனு மதி தரப்பட்டதே ஒழிய, அதே போன்ற நிலமுள்ள அனந்தபூர் ஜில்லாவில் பருத்தி விளைவிக்க அனுமதி தரப்படவில்லை. மத்திய அரசாங்கம் இங்கு உற்பத்தியாகும் நூல் களை எல்லாம் வாரிக் கொண்டு போய் வட இந்திய மாகாணங்களுக்கு விநியோகித்து விட்டு, தென்னிந் திய நெசவாளர்கள் வேலையற்றுப் பட்டினிகிடந்து சாகச் செய்து விட்டது. பீஹார் மாகாணத்தில் தினசரி 1,12,000 பேருக்கு இலவசமாக உணவு அளிக்க எப்போதோ ஏற்பாடு செய்து, அதற்கேற்ற உணவுப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருக்க, தென்னிந்தியாவில் மக்கள் பட்டினி யால் செத்துக் கொண்டிருந்தும், கஞ்சியூற்றும் திறமை கூட இந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்படவுமில்லை. மத்திய அரசாங்கம் கவனிக்கவுமில்லை.