80
80 மாஜி யூனியன் உணவு மந்திரி முன்ஷி சென்னைக்கு வந்திருந்த போது, " இந்த நாட்டில் எப் பகுதியிலும், எவரும் பட்டினியால் சாகுமாறு அரசாங்கம் விட்டு விடாது" என்று இங்குள்ளோர் மெச்சிக் கொள்ளுமாறு பேசினார். " ஆனால் இன்றோ, " இங்கு மங்குமாகச் சில தனிப் பட்டவர்கள் பட்டினியால் சாவதைத் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று நான் உறுதி செய்ய முடியாது என்று பண்டித நேரு புதுடில்லியில் கூறிவிட்டார். பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டிருப்பது தென்னிந் தியாவில்தான். இதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் மத்திய அரசாங்க முதல்வர் கூறுகிறார். சென்னை மாகாணத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் தானியம் வேண்டுமென்று கேட்டதற்கு மத்திய அரசாங்கம் லட்சம் டன் தானியமே கொடுத்தது. ஆனால், சென்னையைப் போலவே 10 லட்சம் டன் தானியம் கேட்ட பம்பாய் மாகாணத்திற்கு 8 லட்சம் டன் தானியத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியது. இவ்வாறே இன்னும் பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டிக் கொண்டே போக முடியும். தென்னிந்தியா வில் இன்றியமையாத இனங்களில் செலவு செய்யப் பணமில்லை என்று கூறிய மத்திய அரசாங்கம், எத்தனையோ பயனில்லாத திட்டங்களில் பணம் செல விட்டு ஏமாந்திருக்கிறது. ஜீப் வாங்கும் திட்டம், வார்ப் பில்லங்கள் அமைக்கும் திட்டம் போன்ற எத்தனையோ திட்டங்களில் கோடிக் கணக்கான ரூபாய்களை இழந்து விட்டிருக்கிறது.