81
81 ஆனால், அதே சமயத்தில் தென்னிந்தியாவில் ராம பாதசாகர் திட்டத்தை நிறைவேற்றப் பணமில்லை என்று மத்திய அரசாங்கம். கூறிவிட்டதை அரசாங்க அதிகாரியே எடுத்துக் கூறுகிறார். தென்னிந்தியாவில் மணிமுத்தாறு திட்டம் போன்றவைகள்கூட மக்கள் பணம் போட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் தென் னிந்தியா கைவிடப்பட்டது. இவ்வாறு மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவை மாற்றாந்தாயன்புடன் நடத்தி, வெளிப்படையாகத் துரோகம் செய்து, வஞ்சனையாக நடந்து கொள்ளுகிறது என்பது மிகமிகத் தெளிவாக விளங்குகிறது. வட இந்தியரின் மனப்போக்கையும், மத்திய அரசாங்கம் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் முன்கூட்டியே நன்கறிந்துதான் திராவிட இயக்கத்தவராகிய நாம் திராவிட நாட்டைத் தனியே பிரிக்க வேண்டுமென்று கோறுகிறோம். திராவிட நாடு தனியே பிரிந்தால்தான் வடநாட்டு சுரண்டலிலிருந்து, வஞ்சகத்திலிருந்து தென் னாடாகிய திராவிடம் தப்ப முடியும் எனக் கருதுகிறோம். திராவிடம் தனியே பிரிந்தால்தான் திராவிட மக்கள் பசியின்றி வாழ முடியும் என்கிறோம். " “ மாலை மணி " (12-6-51)