பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வெற்றி நமக்கே! ஜாதி வெறியர்கள் - வகுப்பு வாதிகள் - நாட்டைக் கெடுக்கும் நாசகாரர்கள்- சமுதாயப் புல்லுருவிகள்- அராஜக வாதிகள்- அக்கிரமக்காரர்கள்- என்றெல் லாம் அர்ச்சனைகள் நடைபெற்றன. பார்ப்பனர்-பார்ப் பனரல்லாதார் என்ற பேதம் கற்பிப்பது குறுகிய நோக்கம், குருட்டுத்தனம், கொடுஞ் செயல் எனக் கூறப் பட்டது. அப்படிக் கூறியவர்களின் வரிசையிலே முன்னணித் தலைவராக இருந்தவர் பண்டிதநேரு. அவருடைய இன்றைய நிலைபற்றி 'மெயில் ' பத்திரிகை தலையங்கம் தீட்டுகிறது, “ ஜாதி வெறியர், வகுப்புவாதி கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு யாரை பண்டித நேரு ஏசினாரோ, அப்படிக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் பக்கத்திலேயே நின்று இன்று பேசுகிறார்" என்பதாக! வகுப்புவாரி உரிமை கேட்பதை வகுப்பு வாதம் என்று பிரசாரம் செய்கின்றன ஆரிய ஏடுகள். ஜாதி யின் பெயரால் உரிமை கேட்பது ஜாதியை வளர்ப்ப தாகாதா என்று கிண்டல்கள் வாரி இறைக்கப்படு கின்றன. அதற்கெல்லாம் நேரு பதில் கூறியிருக்கிறார். நம்முடைய குரலிலேயே பேசியிருக்கிறார், உள்ளம்