பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 எப்படியோ தெரியாது. குரல் நம்முடையதுதான். கருத்து நாம் சொன்னதுதான். ஜாதி உணர்ச்சிகள் ஒழிக்கப்பட வேண்டியதும்.- ஜாதிப் பிரிவினைகள் அழிக்கப்பட வேண்டியதும் நம்முடைய முக்கிய லட் சியம். அந்த லட்சியம் அழிந்து விட்டது என்று அர்த்தமல்ல. காலைக் கதிரவனைக் காண- உதயத்தின் எழிலை ரசிக்க கடற்கரைக்குப் போகிறோம். கடற்கரை நம் இருப்பிடத்திலிருந்து பத்து மைல் தொலைவில் இருந் தால் இருட்டிலேயே ஊரை விட்டுப் புறப்பட்டு விடு கிறோம். கதிரவனைத்தான் காணப் போகிறோமே என்று இருட்டு நேரத்தில் கையில் விளக்கில்லாமல் போகமுடியுமா? கதிரவனைக் கண்ட பிறகு வேண்டு மானால் விளக்குத் தேவையில்லை. இதேதான் வகுப்பு வாரி உரிமையிலும் நாம் சொன்னது. ஜ. திகள் ஒழிய வேண்டுமென்ற நோக்கத்திலே போய்க் கொண்டிருக் கிறோம். தற்போதைய சூழ்நிலையில் பிற்படுத்தப் பட்டுள்ள சமூகத்தினருக்கு சில தனி வசதிகள் தேவை என்கிறோம், இருட்டிலே விளக்குத் தேவை என்பதைப் போல! இப்படித் தனி வசதிகள் கேட்பதால் ஜாதியை ஒழிப்பது என்ற கதிரவனைக் காண்பது போன்ற கொள்கையிலிருந்து நாம் நழுவி விட்டதாக அர்த்தமல்ல! இதைத்தான் பண்டித நேரு பேசியிருக்கிறார். சமூக நீதி சாய்க்கப்படுகிறது என்பது கண்ட திராவிடப் பெருங்குடி மக்கள் நடத்திய கிளர்ச்சியால் - வழங்கிய எச்சரிக்கையால்- இந்தத் திருத்தம் தோன்றி யது என்பதும், நேரு நம் கருத்துக்கள் சிலவற்றைப் பேசினார் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். முதலிலே வந்த திருத்தங்கள் கூட நமக்குத் திருப்தி