84
84 யளிக்கக் கூடியதாக இல்லை. திருத்தம் தித்திக்குமா என்று சந்தேகமுற்றோம். 16-வது ஷரத்தும் 29-வது ஷரத்தும் நம் எண்ணத்துக்கு தடையாயிருக்குமென்று கருதினோம். இப்போது செலக்ட் கமிட்டி அந்த இரண்டு ஷரத்துக்களும் சமூகத்துறையில் அல்லது கல்வி வழியில் பிற்பட்ட நிலையிலுள்ள வகுப்புகளுக்கும் சர்க்கார் தனி வசதி அளிக்க தடையாயிருக்கக் கூடா தென்று குறிப்பிட்டிருக்கிறது. இதை நோக்கும் போது 'நம்பிக்கை நட்சத்திரம்' உதயமாவதாக, விடி வெள்ளி முளைப்பதாக நமக்குத் தோன்றுகிறது. இழந்த நமது உரிமை புத்துயிர் பெறுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. பொறுத்திருந்ததற்குப் பயன் ஏற்படுவது போன்ற ஒளி தோன்றுகிறது. வெத்து வேட்டுகள் வேதனை தீர்க்க உதவாது- விளைவுகளை அமைதியோடு கவனிப்போம் என்று நாம் சொல்லி வந்த விளக்கங்களுக்கு வெற்றி மலர்வது போலத் தெரிகிறது. நமது சக்தி மதிப்பு வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது திருத்தமும், திருத்தம் பற்றிய நேரு வின் பேச்சும். திராவிடஸ்தான் பிரச்னை நேருவை இப்படிப் பேச வைத்திருக்கிறது. இன்னும் சிறிது நாளில் திராவிடஸ்தானைப் பற்றிய பேச்சையே நேரு பேச வேண்டிய நிலை வரத்தான் போகிறது. வீரர்களே! திராவிடக் காளையரே! வீணுக்கு அழிவதல்ல நம் வீரம் ! விவேக வழி சென்றிடுவோம்! வெற்றி மாலை சூடிடுவோம்! எட்டுத் திக்கும் இலட்சி யக் குரல் எழுப்பிடுவோம் ! இறுதி வெற்றி நமக்கே ! " மாலை மணி" (1-6-'51)