85
“யார் காட்டுமிராண்டிகள்?” - சென்னை நகர மக்களாகிய நீங்கள் சிறை: சென்று மீண்ட எனக்கு அளித்திருக்கும் இந்த மகத்தான வர வேற்பைக் கண்டு - இங்குக் கூடியிருக்கும் இந்த மாபெ ரும் மக்கள் பெரு வெள்ளத்தைக் கண்டு நான் பெரு மைப் படுகிறேன். உங்களுடைய இந்த உபசரிப்பும், பாராட்டும் என்னை “ இன்னும் தொண்டு செய்யச் செல்வாய் என்று கட்டளை யிடுவதாகவே நான் கருதுகிறேன். ஐந்து மாத கடுங்காவல் சிறை வாழ்வைக் கடந்து- சிறைக்கோட்டம் தந்த வேதனைகளை அனுபவித்து நான் இப்போது வெளிவந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், நான் இப்போது மன மகிழ்ச்சியோடு, எல்லையற்ற பூரிப்போடு நடமாடுவதாக. ஆனால், நான் உண்மையைச் சொல்கிறேன்- செந்தமிழ் பூஞ்சோலை யிலே 'டால்மியாபுரம்' என்ற கள்ளிக்காடு இருப்பதை வெறுத்து, அதன் பெயரை 'கல்லக்குடி'யாக மாற்ற "சென்றுவா தம்பி போர்க்களம்! ” என்னை வாழ்த்து கூறி வழியனுப்பினாரோ-அக் கட்ட ளைப்படி களத்திலே குதித்து, நான் கண்டவெற்றியைக் 6 " என்று யார்