பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

89 88 கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக திரித்தது வழ க்கு மன்றம்! நாம் போராடினோம் ! எப்படிப் போராடினோம்? கல்லக்குடி என்று கண்கவர அச்சிட்ட கன்னித் தமிழ் எழுத்துக்களை ஒட்டினோம், 'டால்மியாபுர'த்தின் மீது! தண்டவாளத்திலே படுத்தோம்-தற்கொலைக்காக அல்ல; தன்மானத் தமிழர் கூட்டம் எமது என்பதை அறியாத நேருவுக்கு உணர்த்த! “பொது மக்களுக்குத் தொல்லை தராதீர். எழுந்து செல்லுங்கள்" என்று போலீஸ் அதி காரிகள் சொன்னார்கள். நான் சொன்னேன், "இது எங் கள் திடீர் முடிவல்ல; பல கால யோசனைக்குப்பிறகு, பல திறப்பட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, நடத்தப்படும் போராட்டம். மாற்ற முடியாத முடிவு." என்று! அதைக் கேட்ட அதிகாரிகள் - கலைக்டர் உட்பட, எங்களுக்கு பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த என்ஜினிடம் சென்றனர். டிரைவரிடம் ஏதோ முண முணத்தனர். உடனே என்ஜின் ஊதியது. பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த ரயில் புறப்பட்டது. அதன் சக்கரங்கள் சுழன்றன. எங்களை நோக்கி நகர்ந் தன நானும், என்னுடன் படுத்திருந்த நான்கு தொண்டர்களும் கடைசியாக ஒரு முறை திரா விடத்தை எண்ணினோம்; அண்ணாவை நினைத்துக் கொண்டோம்; உலகத்தை ஒரு தடவை பார்த்தோம்; கண்களை மூடிக் கொண்டோம்; கடைசி மூச்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அந்தப் பயங்கரச் சூழ்நிலையை உண்டு பண்ணி விட்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில்