பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 தாயை நடுநிசியில் எழுப்பி, அழைத்து வந்து, மகன் எதிரில் நிறுத்தினார்களாம். எப்படி? பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பாலகன் முன் நிர்வாணமாக! பாலூட்டி சீராட்டி வளர்த்த மகனைப் பார்க்கிறாள் தாய் நிர்வாணமாக! ஆசை மொழிகளைக் கூறி ஆலோலோ பாடிய அம்மா மட்டுமா நிர்வாணமாக நிற்கிறாள்? இல்லை தோழர்களே ! சொல்ல வெட்கமாக இருக்கிறது. அவனையும் அம்மணமாக்கி அம்மா எதிரிலே நிற்க வைத்தார்கள் பாவிகள். அதோடு விட்டார்களா? தாயும் சேயும் நிர்பந்த புணர்ச்சியில் ஈடுபட இம்சித் தார்களாம். என்ன கொடுமை ! யாரால் இந்த அக்கிரமங்கள் ?' அயல் நாட்டினர்கள் ஆட்சியிலா ? இல்லை. காந்தியின் சீடர்கள்- அகிம்சா வாதிகளின் ஆட்சி காலத்திலே ! மாதர்க்கு மதிப்புக் கொடுக் கிறோம் என்று கூறும் மகாத்மா காந்தியின் பக்தர்கள் ஆளும் காலத்தில் தான் தோழர்களே ! ஜஸ்டிஸ் கட்சி ஆண்ட காலத்தில் உப்பு சத்தியா கிரகத்தின் போது அபராதம் விதிக்கப்பட்டதாம் ஒரு பெண்ணுக்கு. அபராதம் கட்ட கையில் காசில்லை என்று அந்த மாது கூறினாள். அவளுக்குத் தண்டனை விதித்த மாஜிஸ்டிரேட், தாலியிலுள்ள பொன்னை விற்று அபராதம் செலுத்தும்படிக் கூறினாராம். இதைக் கேட்ட தேச பக்தர்களுக்கு உடனே கோபம் வந்து விட்டது. அந்தக் காலத்தில் சட்ட மந்திரியாக இருந்த ஆற்காட்டு ராமசாமி “தாலியை அறுத்தார் ! பெண்ணின் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது என்று ஊர் முழுதும் கூச்சலிட்டார். தேசீய ஏடுகள் அதைக் கொட்டை கொட்டையாகப் போட்டு தங்களுடைய தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டன.