89
89 வண்டி மறுபடியும் நின்று விட்டது, எங்களுக்கு நான் கைந்து அடித்தொலைவிலேயே. நாங்கள் கைது செய்யப் பட்டோம்; அரியலூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டோம். - அங்கே நாங்கள் ஒரு நாள் முழுதும் பூட்டி வைக்கப் பட்டிருந்தோம். வெளியே கட்டளைக்குக் கீழ்ப் படிந்து காரியமாற்றத் துடிதுடித்துக் கிடக்கும் திராவிடக் காளைகள் - அடுத்தடுத்த படை வரிசைகள்- ஆனால், நாங்கள் உள்ளே, குகைக்குள்ளே, காராக் கிரகத்துக்குள்ளே! கொலைக்களம் என்று சொல்லு வார்களே, அதைவிடக் கொடூரமான அந்த இருட்டுக் குகையில்-அந்த குகையில் - அந்த அற்புதமான சிறையில் - இருபதே பேர் இருக்க வேண்டிய இடத்திலே அறுபத்து நான்கு பேர் அடைத்து வைக்கப் பட்டிருந்தோம். நண்பர்கள் உட்கார்ந்தபடியே தூங்கினார்கள்; நான் நின்றபடியே, பிடித்தபடியே தூங்கினேன். சிறைக் கம்பிகளைப் இன்னும் எங்களது சிறை வாழ்வைப் பற்றி விளக்கிக் கொண்டே போவதென்றால், அதற்கென ஒரு புத்தகமே எழுதி விடலாம். 1 நாங்கள் தண்டவாளத்திலே படுத்தோம்- தற் கொலைக்காக என்றால், பட்டப் பகலிலே பலர் அறியவா படுப்போம்? எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்ல- எத்தனையோ முறைகள் எடுத்துச் சொல்லி யும், அநேக கூட்டங்கள் நடத்திய பிறகும், தீர்மானங் செவி மடுக்காத தீட்டிய பிறகும், கள் பல காரணத்தால்! அதற்காகத் தண்டனை ?- இதைக் கேட்டு உலகம் கேள்விக் குறி போடுகிறது!