90
90 "பெயர் மாற்றத்திற்கென்று ஒரு போராட்டம் நடைபெற்றது சென்னையிலே" என்று எழுதுகிறது அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்'. பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப் படி கேட்கின்றனர் காங்கிரசார்! பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப் படி கேலி மொழி உதிர்க்கின்றனர் கம்யூனிஸ்டுகள் ! பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப்படி த்தான் கேட்கிறது செழித்திருக்கும் சிவப்பு சீனா இந்த செருக்கு படிந்த அரசாங்கத்தை ! பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?-இப் படித்தான் கேட்கிறது தூய்மை கொழிக்கும் ரஷ்ய நாடு இந்த துப்பு கெட்ட துரோக ஆட்சியை ! நாங்களும் அப்படியேதான் கேட்கிறோம், பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? சாதாரணமாக ஒரு ஊரின் பெயரை மாற்றுவதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்தானா? அந்த அவசியம் ஏன் வந்தது? 'பெயரை மாற்று' என்று மக்கள் தெரிவித் தால் பெயரை மாற்றிவிட வேண்டியது ஆட்சியாளர் கடமை! ஆனால், இந்த ஆச்சாரியார் ஆட்சி அதைச் செய்ய மறுத்தது-ஆகவே போராட்டம் மலர்ந்தது- நம் தோழர்கள் சாவுக் கிடங்கிலே தள்ளப்பட்டனர்— இன்னும் ஆச்சாரியார் 'ஜனநாயகம்' பேசுகிறார்! விந்தை! விந்தை !! விந்தை !!! இங்கு ஜனநாயகம் காணவில்லை. என்ன ஆயிற்று அந்த ஜனநாயகம் ? ஜனநாயகம் என்ற அந்தப் பச்சிளம்