பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 அந்தக் கல்லறைகள் கட்டிய கருப்புக் கண்ணாடி யார் களிக்கிறார் இன்று. அந்தக் களிப்பிலே மறைந் திருக்கும் கடுமை...நம்மை நசுக்க எண்ணும் நப்பா சையே! அந்த நப்பாசையின், நல்ல பாம்பு விஷத்தின் பலனால்தான் நாம் செத்து மடிந்தோம். ஐயாயிரம் பேர் சிறை புகுந்தோம். லால்குடி நடராசன் என்ற வாலிபன்-கல்லக்குடி அறப்போரிலே கலந்து கொள்ள வந்த ஆர்வச் சிங்கம் செத்து மடிந்தான் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து. அவனுக்கு மண நாள் குறித்து வைத் திருந்த தாய் தன் மகனின் பிணக் கோலத்தைக் கண்டு “ஓ'வென்று அலறினாராம்! அந்தத் தாய் கதறி யழுத காட்சி மறைந்து போகுமா? அவர் விட்ட கண்ணீர் தான் வீண் போகுமா? மற்றொரு தோழர்-கேசவன் என்பார் மூளை சொட்டச் சொட்ட "ஆவ், ஆவ்" என்று அலறி அழுதபடியே ஆவி விட்டார். மற்றொரு அபாக் கியவான் - செபஸ்டின் ராஜு என்ற வாலிபன்தான் ரொம்பவும் பரிதாபத்திற்குள்ளாகி விட்டார். குண்டு குலைத்து விட்டது அவரது ஜீவிய பீடத்தை - ஆண் குறியை! அந்தத் திராவிட இளைஞனின் வாழ்வை- வாழ்விலே அவன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய பேரின்ப சுகத்தை அழித்து விட்டனர். அந்த சோகக் குன்றை சிறையிலே விட்டுவிட்டுத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். நாங்கள் உரிமை கேட்டோம்; ஆச் சாரியார் தோட்டாக்களினால் பதில் சொல்லி விட்டார், பயங்கரமான முறையிலே ! போலீசார். இந்தப் பயங்கரங்களுக்கு காரண பூதங்களாக தைரியமாக செப்புகிறார்கள் உயிரைக் கொல்லுவதற்காகத்தான் சுட்டோம் என்று ! இருந்த