பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93 விரட்டுவதற்குச் சுட்டான் வெள்ளையன் - ஆனால் இவர் கள் வேட்டையாடவே சுட்டோம் என்று வீராப்பு மொழிகிறார்கள். உயிரைக் கொல்லுவதற்காக 64 முறை சுட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ‘64' வ ழ க்கு மன்றத்திலே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ‘16’ ஆகிவிட்டது. போகட்டும். அந்த 16 தடவை சுட்ட தும் அவசியம்தானா? சமாளிக்க முடியாத கூட்டத் தைக் கலைக்கவேண்டிய அவசியத்திற்காக, உயிரைக் கொல்லச் சுட்டாய்-உன் எண்ணம் ஈடேறியதா? 16 முறை சுட்டதற்கு 16 உயிர்களா மாண்டது ? இல்லையே, இரண்டுதானே! 14 தோட்டாக்கள் வீணாகத் தானே ஆகிவிட்டன, உன் எண்ணப்படி நடவாமல்? அந்த 14 முறைகளை கூட்டத்தை நோக்கிச் சுடுவதற்குப் பதிலாக, ஆகாயத்தை நோக்கிச் சுட்டு வீணாக்கியிருந் தால், மீதமுள்ள அந்த 2 தோட்டாக்களுக்கு அவசியம் இருந்திருக்கா தல்லவா? திராவிடர்கள் உயிர் நீத்த கோரமும் நிகழ்ந்திருக்கா தல்லவா? கல்லக்குடியிலே 2-தூத்துக்குடியிலே 4 என்ற கணக்கிலே ஆச்சாரியார் பிணக் குழிகளைத் தோண்டிய பிறகும் நம் மேலேயே பாய்கிறார்-‘எறும்பு’ என்று எகத்தாளம் பேசுகிறார்-'பலாத்காரவாதிகள்' என்று பழி சுமத்துகிறார்! ஆச்சாரியார் ஒரு லட்சம் இலட்சியக் காளைகளைக் கொண்டுள்ள கழகத்தை அழைக்கும் வீதம் அறிவுக்குப் பொறுத்தமற்ற முறையிலே இருக்கிறது. எறும்புகள் என்கிறார் - சிந்தனைக்குரிய சொல்தான்; இருந்தாலும் சிரித்தபடியேதான் செப்பியிருக்கிறார் சேலத்து சக்ர வர்த்தியார். 'எறும்புகள்' என்று துச்சமாகக் கூறிய -