பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 வர்தான் வேறொரு இடத்திலே "திராவிடமுன்னேற்றக் கழகம்தான் எனது முதல் நம்பர் எதிரி ! என்றும் கூறி யிருக்கிறார். இதிலேயே புரிந்திருக்கலாம் தோழர் களுக்கு ஆச்சாரியாரின் தரம் எத்தகையது என்பது! எறும்பைப் போய் முதல் எதிரி என்று கூறுபவரை நாம் எப்படி எடைபோடுவது! எறும்பிலும் கேவலமான பலமுடையதுதானே எறும்பைப்போய் ‘முதல் விரோதி' என்று சொல்லிக் கொள்ளும்! அதே சமயத்தில் ஆச் சாரியாருக்கு இன்னுமொன்றும் சொல்ல ஆசைப்படு கிறேன், எறும்பின் செயல்கள் எப்படி யிருக்கும் என்ப தைக் குறித்து! விளக்கைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் வீட்டில் பூச்சியை தெரிந்திருக்கலாம் எல்லோருக்கும். விளக் கோடு மோதுவதால் மோசமே விளையும் என்பதை அது உணராததல்ல; உணர்ந்தும் மோதுகிறது. உயிர் ஊசலாடும் சமயத்தில் தரையிலே விழுந்து துடிக்கவும் செய்கிறது. அந்த நேரத்திலே, உயிருக்கு மன்றாடும் அந்தப் பூச்சியை, இழுத்துச் செல்லும் எறும்புகள் ! அப்படித்தான் பலமிழந்து, பதவி ஜன்னியால் துடி துடிக்கும் ஆச்சாரியாரை அப்புறப்படுத்தும் நல்ல காரி யத்தில் இறங்கக்கூடும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் எறும்புகள் என்பதை அவருக்கு உணர்த்து கிறேன். எல் சமீபத்தில் ஆச்சாரியார் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக் கிறார், தன் நெஞ்சு கல் நெஞ்சு என்று! இது லோரும் அறிந்த விஷயமே தவிர புதிது ஒன்றுமில்லை, அவரே அதை ஒப்புக்கொள்ளும் புதுமையைத் தவிர! அவர் கல் நெஞ்சர்தான்! அதைச் சொல்லிக் காட்டிய