96
96 ஏழைகளுக்கு ஏதாவது வகை தோன்றிற்றா?- இப்படி கேட்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் நான் கேட்கிறேன் உரத்தக் குரலோடு, கழகத்தின் போராட்டங்களினால் ஏழைகளுக்கு ஏது பலன் என்று கேட்கிறாயே, கழகம் ஏழைகளுக்காக- நலிந்தோர்களுக்காக-நடைபாதை வாசிகளுக்காக - அவர்களது நலனுக்காக நடத்தப்பட்ட எந்த இயக்கங் களிலே இதுவரைக் கலந்து கொண்டதில்லை, கொடு அந்தக் கணக்கை முதலில் ! சமுதாயத்தின் ஓர் அங்கமாம் கைத்தறியாளர் களின் பட்டினிப்படை புறப்பட்ட நேரத்திலே-பிள்ளை வியாபாரம் நடத்திய நேரத்திலே-தற்கொலை செய்து கொள்ளத் தயங்காத நேரத்திலே-யாருடைய கண்கள் கலங்கின? யாருடைய நெஞ்சு துடித்தது? யார் வியாபாரியாக மாறினார்கள்? நினைத்துப்பார் நன்றாக, ஜனவரி 4-ந் தேதியை! கழகத்தின் முன்னணி வீரர்கள் அன்று வியாபாரிகளாக நடமாடியதை மறந்திருக்க மாட்டாய்! தேங்கிக் கிடந்த கைத்தறித் துணி களிலே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளவை அன்றே விலையானதை மறந்திருக்க மாட்டாய்! ஆனால், அதனால் கைத்தறியாளர்களின் கண்ணீர் ஓரளவாவது துடைக் கப்பட்டதை மட்டும் மறந்து விட்டாயா? போகட்டும்! தஞ்சையிலே, திருச்சியிலே புயல், பெரு மழை என்ற உருவிலே இயற்கை அன்னை வெறியாட் டம் ஆடி மறைந்தாளே, அப்போது யாருடைய கரங்கள் துடிதுடித்தன ரூ 25,000 சேர்க்க வேண்டுமென்று யாருடைய கரங்கள் புத்தம் புது கைத்தறித் துணி களைக் கட்டுக் கட்டாகத் தந்தன? ?