பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97 நன்றாக சிந்தித்துப் பார் சீற்றத்துணியும் மதியால். மாநாடு அந்த நேரங்களிலே நீங்களல்லவா சமாதான களுக்குப் பறந்து கொண்டும், காஷ்மீர்ப் பிரச்னையை அலசிக் கொண்டும், எங்கிருந்தோ வந்த எங்கிருந்தோ வந்த அமெரிக்க மந்திரி டல்லஸ்ஸுக்குக் கருப்புக்கொடி பிடித்துக் கொண்டும் இருந்தீர்கள்! அம் மாதிரி நடவடிக்கை களினால் மட்டும் இங்கு வாழும் நலிந்தோர் மாளிகை வாசிகளாக ஆகிவிட்டார்களா? ! கம்யூனிஸ்டுகள் நம்மைத் தூற்றுவதில் அர்த்தமே. கிடையாது. மதுரையிலே கருப்பையா பாரதி மாண்டு போனாராம் - அதனால் நாம் பலாத்காரவாதிகளாம்- இப்படி அறிக்கை விடுகிறார்கள். இதுதானா நன்றி ! நாங்கள் என்ன தஞ்சையிலே நெற்போருக்குத் தீயிட் டோமோ? சப்-இன்ஸ்பெக்டரை சாக்காட்டுக்கு அனுப்பத் வீட்டின் அணிந்தோமா? மிராசுதார் மீது தீ வீசினோமா? யார் பலாத்காரவாதிகள்? 22 பேர்களைச் சேலம் சிறையிலே உங்களில் சுட்டுக் கொன்றார்களே, அந்த அநியாயத்தை இந்த நாட்டிலே எடுத்துச் சொல்ல-உங்களுக்காக அனுதாபச் சொல் உதிர்க்க -எங்களைத் தவிர வேறு யார் நாதியிருந் தார்கள் உங்களுக்கு? ஒவ்வொரு மேடையிலும் நானல்லவா அந்த 32 பிணங்களையும் எழுப்பி எழுப்பிப் பேசவைத்தேன்! அதை எல்லாம் மறந்து எங்களைப் பற்றிக் கீழ்த்தரமாகவா பேசுவது? கம்யூனிஸ்ட் நண்பர்கள் ஒரு புற மிருக்க, கண்ணிய மிக்க நமது டில்லிப் பிரதமரோ அவர்களை எல்லாம் ஒரு படி மிஞ்சிவிட்டார். அவர் நம்மைப் பார்த்து 'காட்டு