பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

99


6. உங்களிடத்தில் நில்லுங்கள் அல்லது அசையாமல் இருங்கள் என்ற நடுவர் ஆணையிட்ட பிறகு, (ஏதாவது ஒரு ஆணைக்குப் பிறகு இருந்தாலும்) தான் நிற்கின்ற இடத்தை விட்டு கையால் அல்லது காலால் அகன்றாலும், அதுவும் துப்பாக்கி ஒலிக்கு முன்னர் அப்படி நடந்து கொண்டாலும், அதுவும் தவறான தொடக்கம் என்றே அறிவிக்கப்படும்.

7. எந்த ஒட்டக்காரர் தவறான தொடக்கத்தைச் செய்தாலும், அவள் முதலில் எச்சரிக்கப்படுவார். ஒரு ஆட்டக்காரர் 2 முறை தவறான தொடக்கம் செய்தால், அவர் அந்த ஒட்டப்போட்டியிலிருந்தே விலக்கப்படுவார்.

ஹெப்டாதலான் (7 போட்டிகள்), டெக்காதலான் (10 நிகழ்ச்சிகள்) போன்ற போட்டியில் உள்ள ஓட்டங்களில் ஒருவர் 3 முறை தவறான தொடக்கம் செய்தால், அவர் அந்தப் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.

8. ஓட விடுபவர் (Starter) அல்லது திருப்பி அழைப்பவர் (Recall Starter) அந்த ஓட்டத்தின் தொடக்கம் சரியான தன்மையில் அமையவில்லை என்று கருதினால், ன்ேடும் ஒரு முறை துப்பாக்கியை ஒலித்து, ஒடிய ஒட்டக்காரர்களை மீண்டும் ஓடத் தொடங்கிய இடத்திற்கு அழைக்கலாம்.

குறிப்பு: ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இட்டக்காரர்கள் தவறான தொடக்கம் எடுத்து ஓடுகிறபொழுது, மற்ற ஒட்டக்காரர்களும் அவர்களைத்