பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

109


இன்னொரு மாற்று வழியும் உண்டு. கொக்கியுடன் அமைக்கப்பட்ட கயிறு ஒன்றை, தடையின் உச்ச உயரத்தில் மாட்டி, அந்தக் கயிற்றில் இழுப்பான் (Pulley) ஒன்றை வைத்து, அதில் எடையை ஏற்றினால், குறிப்பிட்ட அந்த எடை வந்தவுடன், தடை கீழே வீழ்ந்து விடும்.

3. அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடையின் உயரம்.

பெண்கள் உயரம்
1. 100 மீட்டர் 0.84 மீட்டர்
2. 400 மீட்டர் 0.762 மீட்டர்
ஆண்கள்
1. 110 மீட்டர் 1.067 மீட்டர்
2. 200 மீட்டர் 0.762 மீட்டர்
3. 400 மீட்டர் 0.914 மீட்டர்


4. ஒரு தடையின் அதிகபட்சமான அகலம் 1.20 மீட்டராகும். ஒரு தளத்தின் (Base) அதிகபட்சமான நீளம் 0.70 மீட்டர். ஒரு தடையின் மொத்த எடையானது 10 கிலோ கிராமுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

சில சமயம், தடைகள் எல்லாம் கொடுக்கப்பட்ட உயரத்திற்கு சரியாக செய்ய இயலாமாற்போய் விடுவதால், அதற்காக சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு தடையின் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலேயோ