பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


பொழுது 10 மீட்டள் தூரம் அதிகமாக்கலாம் அல்லது 10 மீட்டள் தூரம் குறைக்கலாம்.

4. 3000 மீட்டள் தூரத்தடை ஓட்டத்தில், ஆரம்பக் கோட்டிலிருந்து முதல் சுற்று (Lap) முடியும் வரை, எந்த விதமான தடைகளும் இருக்கக்கூடாது. முதல் சுற்றைப் போட்டியாளர்கள் முடிக்கும் வரை, தடைகளை வைக்காமல் எடுத்து விட வேண்டும்.

5. இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு தடையின் உயரம் 0.914 மீட்டள் ஆகும் (3 அடி) அதன் உயரம் 3 மில்லி மீட்டர் உயரமாகவோ அல்லது தாழ்வாகவோ இருக்க அனுமதி உண்டு. ஒரு தடையின் அகலம் 3.96 மீட்டள் ஆகும். (13 அடி). ஒரு தடைக்கும், நீர்த் தடைத்தாண்டலுக்கும் வைக்கும் தடையின் மேல் மட்ட பலகை அளவு 127 மில்லி மீட்டர் ஆகும். அதாவது (5 அங்குலம்) சதுரமானதாகும்.

ஒவ்வொரு தடையின் கனமும் 80 கிலோ கிராமுக்கும் 100 கிலோகிராமுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு தடையின் அடித்தளமானது 1.20 மீட்டருக்கும் 1.40 மீட்டருக்கும் இடைப்பட்ட அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

ஒரு தடையை ஒடுக ளப் பாதையில வைக்கும்பொழுது, தடையின் உச்சக்கட்ட உயரப் பலகையின் உட்புறமாக இருக்குமாறு வைக்க வேண்டும்.