பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

117


16. மாரதான் ஒட்டம்
(Marathan Race)
(விதி - 165)

1. மாரதான் ஓட்டம்-அமைக்கப்பட்ட சாலைகளில் ஒடப்பட வேண்டும். ஏதாவது போக்குவரத்து இடையூறுகள் அல்லது ஒட்டம் சுமுகமாக நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் சாலைகளில் அமையாதபோது, அந்த ஓட்டப் பாதையை சாலைகளின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடைபாதை அல்லது சைக் கிள் பாதையின் மீது ஓடச்செய்யலாம். ஆனால், அந்த ஓடும் தூரத்தின் அளவானது, சரியாக அளந்து குறிக்கப்படல் வேண்டும்.

மென்தரை மற்றும் பசும்புல் தரை இவற்றை ஒடும்பாதையாக வைக்கக்கூடாது ஓட்டத்தின் தொடக்கமும் முடிவும், பந்தய அரங்கிற்குள் தான் இருக்க வேண்டும்.

குறிப்பு: ஓட்டத்தின் முழுப் பாதையும் ஒரு திருப்புமுனையுடன் அல்லது ஒரு சற்றுபோல அமைவது சிறப்புக்குரியதாகும். மாரதான் ஓட்டத்தின் முழுமையான தூரம் 42,195 மீட்டர்.