பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

121


17. தொடரோட்டங்கள்
(Relay Races)
(விதி - 166)

1. ஒடும் பாதைகளில் எங்கெங்கு யார் யார் நின்று ஒட வேண்டும் என்பதைக் குறித்துக் காட்டுகின்ற புறப்படும் எல்லைக் கோட்டைக் (Scratch Lane) குறித்திருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு போட்டியாளரும் ஒடப் புறப்படும் எல்லைக் கோட்டுக்கு முன்புறமாக 10 மீட்டர் தூரத்திலும், பின்புறமாக 10 மீட்டள் தூரத்திலும் எல்லைக் கோடுகள் போட்டு, குறுந்தடியை (Baton) மாற்றிக் கொள்கின்ற எல்லைகள் (Exchange Zone) என்று குறித்துக் காட்டும் வண்ணம் அளந்து போட்டிருக்க வேண்டும். இந்த எல்லைக் கோடுகள் இரண்டும் அந்தக் குறுந்தடியை மாற்றிக் கொள்ளும் பகுதியைச் சேர்ந்ததாகவே கருதப்படும்.

4 x 200 மீட்டர் தொடரோட்டங்களில் முதலாவது தொடக்க ஒட்டக்காரரைத் தவிர மற்ற மூன்று ஒட்டக்காரர்களும், குறுந்தடியைப் பறிமாற்றம் (Exchange) செய்து கொள்கின்ற பகுதிக்கு வெளியே இருந்து உள்ளே 10 மீட்டர் தூரம் ஓடிக்கொள்ளலாம். இந்த குறுந்தடி மாற்றப்பகுதியை, ஒவ்வொரு ஓடும் பாதையிலும் தெளிவாகக் குறித்திருக்க வேண்டும்.