பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


4 x 200 மீட்டர் தூர தொடரோட்டங்களில், முதல் இரண்டு ஒட்டக்காரர்களும், அவரவருக்குரிய ஓடும் பாதையில் தான் கட்டாயமாக ஒடிச் செல்ல வேண்டும். அவர்களைத் தொடர்ந்து ஒடவிருக்கும் மூன்றாவது ஒட்டக்காரர் முதலாவது வளைவு வரும் வரை (First Bend) ஓடுகிறபொழுது, அவர் அணியினர் ஓடிய அதே ஓடும் பாதையில் தான் ஓடிச் சென்றாக வேண்டும்.

4x400 மீட்டர் தூர தொடரோட்டத்தில் முதலாவது சுற்று முழுவதும் தொடக்க ஒட்டக்காரர் அவருக்கு அளிக்கப்பட்ட ஒட்டப்பாதை முழுவதும் ஓடி வரவேண்டும். இரண்டாவது சுற்றினை ஒடவிருக்கும் ஒட்டக்காரர், முதல் வளைவு முடியும்வரை அவரது ஒட்டப்பாதையிலே ஓடலாம்.

அதற்குப் பிறகு ஓடும் பாதையிலுள்ள நேர்ப் பாதைகளில் (Straight) எந்த இடத்தில் வேண்டுமானாலும், விருப்பப்படி ஒடிமுடிக்கலாம். அதற்காக, எந்த இடத்தில் இவ்வாறு ஓடலாம் என்பதை, ஒட்டப்பாதைகளின் இருபுறத்திலும் வெளிப்புறத்தில் 1.50 மீட்டர் உயரத்தில் இரண்டு கம்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அத்துடன், நோக்கோட்டை அடைவதற்கான ങേധക குறிக்கும் அடையாளக்கோடு ஒன்று, ஒடும்பாதைகளின் குறுக்காகப் போடப்பட்டிருக்கும்.

குறிப்பு: 4 x 400 மீட்டர் தொடரோட்டத்தில், 3 அணிகளுக்குள்ளாக பங்கு பெறும்போது, முதல் சுற்றில், முதல் வளைவு வரையிலும், அவரவர் ஓடும் பாதையில் ஓடி, பிறகு மாறிக்கொள்ள வேண்டும்.