பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

131


1. பந்தயம் நடத்தும் காலம் : ஓடுகளப் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, குளிர்காலம் முழுவதும் (Winter) இந்தப் போட்டிகளை நடத்தலாம்.

2. பந்தயப் பாதை . (Course) (அ) காடு மலை ஒட்டத்தின் பாதைகள் திறந்த வெளிகள், வயற்காடுகள், மணற் பாதைகள் (Health land) , பொதுவெளிகள்; புல்தரைகள் போன்றவைகள் அடங்கும். குறைந்தபட்சம் உழுத நிலங்களைக் கூட ஒடும் பாதைகளாகக் கொள்ளலாம்.

சில சமயங்களில் காட்டுவெளிகளில் ஒடும் பாதையை அமைத்திருந்தால், அவை ஒட்டக்காரர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வண்ணம் செம்மைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஒட்டக்காரர்கள் ஓடக் கூடிய அளவுக்கு, குறைந்த அளவு அகலமாவது பாதைகளை செப்பனிட்டிருக்க வேண்டும்.

ஆ) காடு மலை ஒட்டப் போட்டியின் முழு தூரமும், போகின்ற பாதைகள் தெளிவாகத் தெரிவது போல வைக்கப்படுவதுடன் ஓடும் பாதையில் இடப் புறத்தில் சிவப்புக் கொடியும், வலப்புறத்தில் வெள்ளைக்கொடியும் ஊன்றப்பட்டிருக்கவேண்டும். அப்படிப்பட்ட வண்ணக் கொடிகளைத் தாங்கியுள்ள கம்பியானது 125 மீட்டர் துரத்திலிருந்து பார்த்தால், பார்வைக்குப் புலனாகும்படி தெளிவாக, வைக்கப்பட்டிருக்கவேண்டும்.