பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

133


அப்படிப்பட்ட சந்துப்பாதைகள் அமையாமல் பார்த்து அமைக்க வேண்டும்.

ஈ) ஓடுகிற பாதைகளின் மொத்த தூரத்தை முதலிலேயே அளந்து, ஒட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஒட்டப் போட்டியை அறிவிக்கும் முன்னதாகவே, அனைவருக்கும் அறிவித்துவிட வேண்டும். அத்துடன் கூட, ஒட்டப் பாதைகள் பற்றிய குறிப்பையும், விவரத்தையும் பங்கு பெறுபவர்களுக்கு சுருக்கமாக அறிவித்திடவும் வேண்டும்.

உ) ஒட்டப் போட்டியின் அமைப்பாளர்கள், சரியான தரமான ஒட்டப்பாதையினைத் தேர்ந்தெடுத்து அமைப்பதும், பாதையின் இருபுறமும் கொடிகளை ஊன்றித் தெளிவுபடுத்துவதும், போன்றவற்றை, நிகழ்ச்சி நிரல் புத்தகத்திலேயே குறிப்பிட்டுக் காட்டுவது கடமையாகும்.

போட்டியை நடத்துகின்ற பொறுப்பேற்றவர்கள் ஒட்டக்காரர்களை வரிசைப் படுத்துதல், ஒழுங்குற நிற்கவைத்தல் போன்ற வற்றிற்கான உதவியாளர்கள், துணை நடுவர்கள், அந்தந்த முக்கிய திருப்பங்களில் நின்று கண்காணிக்கும் உதவியாளர்கள், ஒட்டக்காரர்களை ஒழுங்கான வழியில் ஓடச்செய்யக் குறிப்புக்காட்டும் உதவியாளர்கள் இவர்களையெல்லாம் முன்னேற்பாடாக நிறுத்தி வைத்துப் போட்டியை சிறப்புறவும், செம்மையாகவும் நடத்திடவேண்டும்.