பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



136

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


5. ஒடும் குழுவும் மாற்றோட்டக்காரர்களும் போட்டிகளில் பங்குபெறுகிற ஒரு குழுவின் மொத்த ஒட்டக்காரர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான மாற்றோட்டக்காரர்கள் மற்றும் ஒரு குழு அமையும் முறை யாவும், போட்டிகளுக்குப் போட்டி வித்தியாசப்படுகிறது.

அகில உலக அமெச்சூர் கழகம் நடத்துகின்ற காடுமலை ஒட்டப் போட்டிகளுக்கான அமைப்பும் விதிமுறைகளும் ஒரு நிரந்தரமான வழிகாட்டும் குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. அவைகளைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

1. ஆண்களுக்கான போட்டியில்-ஒரு குழுவிற்கு 12 ஆட்டக்காரர்களுக்குமேல் இருக்கக் கூடாது. அவர்கள் 12 பேர்களில் 9 பேர்களுக்குக் குறையாமல் தேர்ந்தெடுத்து, ஒரு குழுவிற்காக ஓடவிடவேண்டும். அவர்களில் 6 பேர்கள் தாம் வெற்றி எண்கள் பெறும் வாய்ப்புப் பெறுகின்றார்கள். (Six will Score).

பெண்கள் , இளைஞர்களுக்கான ஒட்டப் போட்டிகளில், 4 பேர்களுக்குக் குறையாமல், 8 பேர்களுக்கு மேல் போகாமல், ஒரு குழு அமைக்கப்படவேண்டும்.

6 பேர்களுக்கு மிகாமல் ஓட்டப் போட்டியில் பங்கு பெற்றால், அவர்களில் 4 பேர்கள் தாம் வெற்றி எண்களைப் பெறும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள்.