பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறிப்பு: ஒரு தாண்டும் போட்டியாளர் உயரத்தாண்ட முயற்சிக்குபொழுது. கீழே தரையை உதைத்து எழும்புகிற சமயத்தில் குறுக்குக்கம்பத்தின் மறுபுறத்தரையை மிதித்து விடுகிறபோது, அவர் சரியாகத்தாண்டி விடுகிறாள். அவ்வாறு தரையை மிதித்துத் தாண்டியபோது, அவருக்கு எந்தவிதமான சக்தியும் உதவியும் அதனால் கிடைக்கவில்லை என்று நடுவர் கருதினால். அவர் தாண்டியது சரி என்று அங்கீகாரம் அளிக்கலாம். அது தவறில்லை என்றும் கூறிவிடலாம்.

3. ஒருவர்பின் ஒருவராக, வந்து தாண்டுகிற போட்டியாளர்கள் வாய்ப்பு வரிசை முறை (order) சீட்டுக்குலுக்கல் மூலமாகவே தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்தப்படுகிறது.

4. தாண்டும் போட்டி ஆரம்பமாகும் முன்னர், ஒவ்வொரு தாண்டல் முடிந்தபிறகு குறுக்குக் கம்பம் எந்த உயரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் எவ்வளவு உயரம் உயர்த்தப்படும் என்கிற விவரத்தினை எல்லாதாண்டும் போட்டியாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். எல்லாரும் தவறிழைத்து போட்டியிலிருந்து விலகிக்கொண்ட பிறகு, இறுதியில் ஒருவர் மட்டும் இருக்கிற பொழுது அல்லது இறுதியில் சமநிலை (Tie) ஏற்பட்டு சிக்கல் நேர்ந்திருக்கிற பொழுது, இவ்வாறு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. தெரிவித்தால் போதும்.