பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

143



(விதி 146 ஐ காண்க)

போட்டி நிகழ்ச்சி தொடங்கப் பட்ட பிறகு, எந்தப் போட்டியாளரும் ஓடி வரும் பாதையை அல்லது தாண்டிக் குதிக்கும் இடத்தை, பயிற்சி செய்து, பழகிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது.

5. ஒவ்வொரு போட்டியாளரும் அவர் தாண்டிய உச்ச உயரத்தைக் கணக்கிட்டே வெற்றி இடத்திற்காகத் (Place) தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிலும், இறுதியில் முதலாவது இடத்திற்காக சமநிலை ஏற்படுகிறபோது, அதை நிவர்ததி செய்யத்தாண்டும் வாய்ப்புக் கூட கணக்கிடப்படுகிறது.

6. ஒரு போட்டியாளர், எந்த உயரத்தில் இருந்து தாண்ட விரும்புகிறாரோ, அந்த உயரத்திலிருந்தே தாண்டத் தொடங்கலாம். தான் தாண்ட விரும்பும் உயரம்வரை, அவர் இருந்து, பிறகு தாண்டலாம். ஆனால், ஒரு உயரத்தைத் தாண்ட முயற்சிக்கும்பொழுது, 3 முறை தொடர்ந்தாற் போல் தாண்டத் தவறினால், அவர் அந்தப் போட்டியில் தொடர்ந்து பங்கு பெறும் வாய்ப்பை இழந்து விலக்கப்படுகிறார்.

குறிப்பு : இந்த விதியில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு போட்டியாளர், ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் (Height) தாண்டும் போது முதல் தடவையோ அல்லது இரண்டாம் தடவையோ கூட தான் முடியாமல் முயற்சியில் தோற்றுப்போகலாம். பிறகு, 3வது வாய்ப்பு,